மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி தனது 2 வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது.
ஆன்டிகுவாவில் நடைபெறும் டெஸ்டில் ரொஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஹோல்டர் மற்றும் கெமர் ரோச் ஆகிய இருவரும் அபாரமாகப் பந்துவீசி இலங்கை அணியை 169 ரன்களுக்குள் சுருட்டினார்கள். லஹிரு திரிமன்ன அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். ஹோல்டர் 5 விக்கெட்டுகளும் ரோச் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
இதன்பிறகு விளையாடிய மே.இ. தீவுகள் அணி, 2ஆம் நாளின் முடிவில் 101 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. கார்ன்வோல் 60 ரன்கள், ரோச் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
3ஆம் நாளில் மே.இ. தீவுகள் அணி, 103 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கார்ன்வோல் 61 ரன்கள் எடுத்தார்.
பந்துவீச்சில் 47 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டை சுரங்க லக்மல் வீழ்த்தினார்.
முதல் இன்னிங்ஸில் 102 ரன்களுக்குப் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி தனது 2வது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி வருகிறது. தொடக்க வீரர் திரிமன்ன 76 ரன்களும் ஒஷாடா பெர்னாண்டோ 91 ரன்களும் எடுத்து அசத்தினார்கள்.
3ஆம் நாள் முடிவில் இலங்கை அணி தனது 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. தனஞ்ஜய டி சில்வா 46 ரன்களும், நிசங்க 21 ரன்களும் எடுத்துக் களத்தில் உள்ளார்கள். இலங்கை அணிக்கு 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 153 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் இந்த டெஸ்டின் கடைசி இரு நாள்கள் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.