சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது.
அண்ணாத்த படப்பிடிப்பு ஏற்கனவே பல தடங்கல்களுக்கு உள்ளானதால் தற்போது எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது தயாரிப்பு நிறுவனம்.
முன்னதாக ஐதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்ட படப்பிடிப்பு திடீரென ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால் கைவிடப்பட்டது. தற்போது சில மாதங்கள் கழித்து மீண்டும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.
தற்போது சென்னையில் ஒரே இடத்தில் பல படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதால் கொஞ்சம் பயத்தில் தான் இருக்கிறதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம். இருந்தாலும் ரஜினி உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு தான் படப்பிடிப்பைத் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் அதே இடத்தில் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு தற்போது கொண்டாடப்படும் நடிகராக உருவாகிவரும் லெஜண்ட் சரவணா (அண்ணாச்சி) படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அதனால் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் அருள் சந்தித்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்டைலில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு டப் கொடுக்கும் வகையில் ஜிகுஜிகு என்று உடையணிந்து ரஜினியிடம் பேசி கொண்டிருக்கும் புகைப்படம்தான் என்ற இணையதள டிரென்டிங்.