25.8 C
Jaffna
December 23, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு குருந்தூர் மலையை சுற்றியுள்ள 400 ஏக்கர் காணியை கோரும் தொல்பொருள் திணைக்களம்: முல்லைத்தீவில் பௌத்த வலயம் உருவாகிறது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலையை சுற்றியிலுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, கபளீகரம் செய்யும் முயற்சியில் தொல்பொருள் திணைக்களம் இறங்கியுள்ளது என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.

அந்த காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு, தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூலமாக அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில், 1932 ஆண்டு உறுதியின்படி- தொல்பொருள் என்ற பெயரிலான வரைபடம் ஒன்றின்படி- 78 ஏக்கர் காணி வழிபாட்டிடம் ஒன்றிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தை மீள அளவீட்டிற்காக அறிவிக்கும்படி பிரதேசசெயலாளரிடம் தொல்லியல் திணைக்களம் கேட்டது.

ஏற்கனவே இருந்த வரைபடத்தை புதுப்பிப்பதெனில், ஏற்கனவே இருந்த பெயரிலேயே புதுப்பிக்க வேண்டும்.

தொல்லியல் நிலம் என இருந்த வரைபடத்தை, மீள அளவீடு செய்ய பின்னர், குருந்தூர் விகாரையென்ற பெயரிலேயே அந்த வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது முறையற்ற  நடவடிக்கை  என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த இடத்தில் பௌத்த விகாரையொன்றை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ள தொல்பொருள் திணைக்களம், முல்லைத்தீவு மாவட்ட  செயலாளரிற்கு எழுத்துமூலமாக அறிவித்திருந்தது. அதன்பின்னரே குருந்தூர் மலை அகழ்வாராய்ச்சி தொடங்கியது.

அந்த நிலையில், குருந்தூர் மலையை சுற்றியுள்ள 400 ஏக்கர் காணியை தொல்பொருள் திணைக்கததிற்கு  வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 400 ஏக்கரில், சுமார் 150 ஏக்கர் காணி, பழைய தண்ணீர்முறிப்பு கிராமத்திற்குரிிய, மிகுதி காணிகள்  நாகஞ்சோலை வனப்பகுதிக்குரியவை.

அந்த பகுதியில் பெரியளவில் பௌத்த வழிபாட்டிடத்தை அமைத்து, பௌத்த வலயமாக்க முயற்சிப்பதாக தெரிகிறது.

அந்த காணியை தொல்பொருள் திணைக்களத்திற்கு ஒப்படைக்குமாறு வடமாகாண ஆளுனர் திணைக்களத்திலிருந்தும், கரைத்துறைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகளிற்கு தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டும் வருகிறது.

எதிர்வரும் 1ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், தொல்பொருள் திணைக்களம் 400 ஏக்கர் காணி கோரும் விடயம் ஆராயப்படவுள்ளது. அதன் நிகழ்ச்சி நிரலில் விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

அரச வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு

east tamil

எட்கா ஒப்பந்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் – கலாநிதி நந்தலால் வீரசிங்க

east tamil

2025 பெப்ரவரி முதல் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

Pagetamil

Leave a Comment