Pagetamil
உலகம்

ஜேர்மனியை மிரட்டும் 3ஆம் அலை: ஊரடங்கு நீட்டிப்பு

ஜேர்மனியில் கொரோனா 3ஆம் அலை பரவும் ஆபத்து இருப்பதால் ஊரடங்கு நடைமுறை ஏப்ரல் 18ஆம் திகதி வரை நீட்டிக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்த ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவியது. ஜெர்மனியில் தொடக்கத்தில் கட்டுக்குள் இருந்தபோதும் பின்னர் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. ஜெர்மனியில் 2,659,516, அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 74,664 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவைத் தொடர்ந்து, பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், ஜேர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கொரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஜேர்மனியில் கொரோனா 3ஆம் அலை ஆபத்து ஏற்பட்டிருப்பதால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வந்தது. இது தொடர்பான மாகாண ஆளுநர்களுடன் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் ஆலோசனை நடத்தினார்.

ஊரடங்கை மேலும் நீட்டிக்க ஜேர்மனி அரசு முடிவு செய்தது. அதன்படி ஜெர்மனியில் கொரோனா 3ஆம் அலை தொடங்கும் ஆபத்து இருப்பதால் அதனை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஏப்ரல் 18ஆம் திகதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் திருநாள் விடுமுறை காலத்தில் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும், 3ஆம் அலையை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது, மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என ஏஞ்சலா மெர்கல் வலியுறுத்தியுள்ளார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அழைப்பு

Pagetamil

இனி அமெரிக்க இராணுவத்தில் மாற்றுப் பாலினருக்கு இடமில்லை

Pagetamil

Leave a Comment