அமெரிக்காவின் கொலோராடோ மாநிலத்தின் போல்டர் பகுதியில் உள்ள ஒரு பேரங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பத்துப் பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ‘கிங் சூப்பர்ஸ்’ என்னும் பேரங்காடியில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டின் நோக்கம் என்ன என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.
இந்தச் சம்பவம் நடந்த இடம் டென்வர் நகரின் வடகிழக்குப் பகுதியில் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் போலிஸ்காரர் ஒருவரும் கொல்லப்பட்டதாக போல்டர் போலிஸ் துறைத் தளபதி கெர்ரி யாமாகுச்சி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1