மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் இரண்டு தாதியர்களை கதிரியக்க அறைக்குள் வைத்து பூட்டிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மஹரமக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக இதுவரை கதிரியக்க நிபுணர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
வைத்தியசாலையின் இரு தாதியர்களும் கதிரியக்க அறையில் சுமார் ஒரு மணிநேரம் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அதனால் அவர்கள் உடல் ரீதியாக பாதிப்புக்குள்ளாகியிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
கைதான கதிரியக்க நிபுணர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1