மன்னார் எமில் நகரில் வீடு ஒன்றில் திடீர் தீ விபத்து

Date:

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள  எமில் நகர்   தோமையார்   பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று திங்கட்கிழமை மதியம் எரிந்து பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இன்று திங்கட்கிழமை (22) மதியம் குறித்த பகுதியில் 2 மணி அளவில் குறித்த வீட்டில் திடீர் என தீப் பரவல் ஏற்பட்டு எரிந்த நிலையில் அயல்  வீட்டில் உள்ளவர்கள் அதன் உரிமையாளருக்கு தகவல் வழங்கிய நிலையில் உரிமையாளர் அவ்விடத்திற்கு வந்து தீயை அனைக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
அயலவர்கள் மற்றும் கடற்படை இராணுவம் மன்னார் நகர சபை ஆகியோரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
எனினும் வீட்டிற்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது. குறித்த வீட்டில் வாடகைக்கு வசிப்பவர்கள் அயல் கிராமத்திற்கு இறப்பு வீடு ஒன்றிற்கு சென்றுள்ள நிலையில் குறித்த தீப் பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இதனையடுத்து அவர்களுக்கும் தகவல் வழங்கப்பட்டு அவர்களும் அவ்விடத்திற்கு வந்து மீதமான பொருட்களை மீட்டுள்ளனர்.
வீட்டில் வசிப்போர் வாகனம் ஒன்று வைத்துள்ள நிலையில் அந்த வாகனத்திற்கான டயர் மற்றும் காற்று அடிக்கும் இயந்திரம் உள்ளிட்ட ஏனைய பொருட்களும் வீட்டின் ஓர் அறையில் இருந்த நிலையில் தீ பரவல் காரணமாக முன் பகுதி மற்றும் கூரை பகுதி பாரிய சேதங்கள் ஏற்பட்டு தீக்கிரையாகி உள்ளது.
 குறித்த சம்பவம் எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்று அறிய முடியாத நிலையில் மன்னார் பொலிஸாரிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில்    பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து  மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மன்னார் நகரப் பகுதியில் தீயணைப்பு படை பிரிவு இல்லாமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதும் இது வரை குறித்த படைப்பிரிவும், தீயணைப்பு வாகனமும் மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்படவில்லை என்பது   குறிப்பிடத்தக்கது.
spot_imgspot_img

More like this
Related

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL)...

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின்...

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்