பொலிஸ் நிலையத்தில் கணவரின் அசிட் தாக்கிதலால் கடுமையான காயங்களுக்கு ஆளான பெண்ணொருவர் காலி-கராபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நபர் நேற்று (21) காலை காலியில் உள்ள உடுகம பொலிஸ் நிலையத்தில் அசிட் தாக்குதலை நடத்தியதாக பொலிசார் தெரிவித்தனர்.
தம்பதியினரிடையேயான ஏற்பட்ட குடும்ப தகராறு குறித்து விசாரிக்க பொலிஸார் இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்திருந்தனர். அங்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனைவியின் முகத்தில் திடீரென அசிட் வீசினார்.
அசிட் தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்தார்.
சந்தேகநபர் உடுகம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண் 28 வயதுடையவர். சந்தேகநபரான கணவர் 32 வயதுடையவர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1