வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு தனது மகளும், மனைவியும் வீட்டில் இருந்த நிலையில் கணவனால் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த அவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
வாள்வெட்டில் ஈடுபட்ட நபர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1