இலங்கை லெஜன்ட்ஸ் மற்றும் இந்தியா லெஜன்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான வீதிப் பாதுகாப்பு தொடரின் இறுதி போட்டியில் இந்தியா லெஜன்ட்ஸ் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை லெஜன்ட்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இந்தியா லெஜன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 167 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அதனடிப்படையில் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீதிப் பாதுகாப்பு தொடரின் இறுதி போட்டியில் இந்தியா லெஜன்ட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1