பசறையில் நேற்று இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தை தொடர்ந்து, அந்த இடத்திலிருந்து தப்பியோடிய 45 வயதான சந்தேகநபர் நேற்று மாலை பசறை பொலிசாரால் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
விபத்து நடந்த நேரத்தில் மதுபோதையில் என்பதை தீர்மானிக்க பேருந்து சாரதியின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் இன்று நீதித்துறை மருத்துவ அதிகாரியால் பெறப்படும் என்று பொலிசார் தெரிவித்தனர்.
பசறை 13வது மைல் கல், மெத்தக்கடை பகுதியில் நேற்று நடந்த விபத்தில் உயிரிழந்த 14 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நீதிவான் விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னர் சடலங்கள் உளவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
விபத்தில் காயமடைந்த 31 நபர்களிடமிருந்து அறிக்கைகள் பதிவு செய்யப்படும் என்று பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.