25.5 C
Jaffna
February 2, 2025
Pagetamil
கிழக்கு

கல்முனையில் தொலைபேசி விற்பனை நிலையம் உடைத்து திருட்டு!

தனியார் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்று திருடர்களால் உடைக்கப்ட்டு மீள்நிரப்பு அட்டைகள், கைத்தொலைபேசிகள், பணம் என்பன களவாடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மருதமுனை பிரதான வீதியில் உள்ள தனியார் தொலைபேசி விற்பனை நிலையத்தில் இன்று (21) அதிகாலை இத்திருட்டு நடந்துள்ளது.

இரு திருடர்கள் தனியார் தொலைபேசி விற்பனை நிலையத்தினையே முழுமையாக உடைத்து திருடி சென்றுள்ளதுடன் ஏனைய கடைகள் உடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் பலனளிக்காமையினால் அவர்கள் கொண்டு சென்ற இரும்பு வெட்டும் உபகரணத்தை கைவிட்டு சென்றுள்ளனர்.

இவ்வாறு திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் துவிச்சக்கரவண்டி ஒன்றில் வருவது, தங்கள் அடையாளம் தெரியாத படி உரப்பையினால் முகங்களை மூடி இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதை அருகே உள்ள வர்த்தக நிலைய சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இப்பகுதியில் கடும் மழை பெய்த நிலையில் இத்திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு கல்முனை பொலிஸார் வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த தனியார் கைத்தொலைபேசி விற்பனை நிலையத்தில் 30 கைத்தொலைபேசிகள், 55 ஆயிரம் ரூபா பணம் பல்வேறு தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் என்பன திருடர்களால் எடுத்து செல்லப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட வர்த்தகர் தெரிவித்தார்.

மேலும் மேற்குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது

east tamil

திருகோணமலையில் சிலம்பாட்ட பொங்கல் திருவிழா

east tamil

கம்பளை வீதியில் விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்!

east tamil

வேலூர் இந்து மயானத்தை சீரமைக்க கோரிக்கை

east tamil

கங்குவேலியில் உழவர் தின நிகழ்வு

east tamil

Leave a Comment