அம்பாறை, உகண பகுதியில் விமானப்படையினரின் பரசூட் பயிற்சி பயிற்சியின் போது விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலுமொருவர் காயமடைந்துள்ளார்.
பயிற்சியின்போது எதிர்பாராத காற்று மாற்றம் காரணமாக இரண்டு பரசூட்டுகள் நடுவானில் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று விமானப்படை செய்தித் தொடர்பாளர் விங் கொமாண்டர் துஷன் விஜேசிங்க தெரிவித்தார்.
“இன்று காலை பயிற்சியின் போது, வீரர்கள் பரசூட்டிலிருந்து தரையிறங்குகையில், காற்றின் திசை திடீரென மாறியது. இரண்டு பரசூட்கள் மோதிக் கொண்டதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், ஆனால் பின்னர் ஒருவர் உயிரிழந்தார்“ என தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1