24.8 C
Jaffna
January 8, 2025
Pagetamil
விளையாட்டு

இறுதிப் போட்டியில் இலங்கை லெஜண்ட்ஸ்!

தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணியுடன் இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்ற இலங்கை லெஜண்ட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப் போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் அணியுடன் மோதுகின்றது.

வீதி பாதுகாப்பு ரி20 தொடர் இந்தியாவின் ராய்ப்பூரில் இடம்பெற்று வருகின்றது.

இத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் லெஜண்ட்ஸ் அணியை தோற்கடித்த இந்திய லெஜண்ட்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

நேற்று நடந்த 2வது அரையிறுதியில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியும் தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணியும் மோதின.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை லெஜண்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணி இலங்கை லெஜண்ட்ஸ் அணியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

அந்த அணி சார்பாக வன் வெய்க் 53 ஓட்டங்களையும் அல்வீரோ பீற்றர்சன் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை லெஜண்ட்ஸ் அணி சார்பில் நுவான் குலசேகர 25 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

126 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 17.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டங்களை பெற்று, 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஜெயசிங்க 47 ஓட்டங்களையும் (25 பந்து), தரங்க 39 ஓட்டங்களையும் (44 பந்து) பெற்றுக்கொடுத்தனர். டில்சானும், ஜெயசூரியவும் தலா 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணி சார்பாக நிற்னி மற்றும் பீற்றர்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

இலங்கை லெஜண்ட்ஸ் அணி எதிர்வரும் 21 ஆம் திகதி இந்திய லெஜண்ட்ஸ் அணியை இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

Leave a Comment