26.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வரார்; காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் பழிவாங்கும் உணர்வுடன் உடன்பாடில்லை: அமைச்சர் டக்ளஸ்!

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் தேடும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கந்லதுரையாடலில் வடக்கு மாகாணத்தினை சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர். காணாமல் போனோரின் உறவினர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்குமாயின் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்தில் தீர்வினை பெற்றுத் தரமுடியும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்திருந்தார்.

குறித்த கலந்து கொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் 10 பேர் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டு அவர்கள் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு குறித்த விவரங்களை கொண்டு தீர்வு வழங்க கூடிய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கலாம் என்றார்.

“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இது அணிகளாக செயற்படுகின்றார்கள். ஒரு தரப்பு இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்க கூடாது எனவும் இன்னொரு தரப்பு இதற்குரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் எதிர்பார்த்து இருக்கின்றார்கள். எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குரிய தீர்வினை தற்போதைய நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி பெற்றுத் தருவேன். ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வரார் என படித்துள்ளோம். காணாமல் போனவர்கள் விடயத்தில் பழிவாங்கும் உணர்வுடன் எனக்கு உடன்பாடில்லை. காணாமல் போனவர்களின் உறவினர்களின் பிரச்சனையை நான் பொறுப்பெடுத்துள்ளேன். அதற்கு நான் பொறுப்பு என தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலின் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் தங்களது உறவுகள் பலர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எனவும் பலருக்கு என்ன நடந்தது என தெரியாது எனவும் தெரிவித்தனர்.

எனினும் குறித்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தை தீராத பிரச்சினையாக வைத்திருக்க விரும்பவில்லை. சில அரசியல் தலையீடுகள் இந்த விடயத்தை தீராத பிரச்சினையாக வைத்து அரசியல் செய்ய முனைகின்றார்கள். எனினும் நான் இதற்கு ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் முகமாகவே இன்றைய தினம் முதற்கட்டமாக உங்களை சந்தித்துள்ளேன். எதிர்வரும் காலங்களில் உங்களை ஜனாதிபதியிடம் அழைத்துச் சென்று உங்களுக்குரிய தீர்வினை பெற்றுத்தர முடியும் என எதிர்பார்க்கின்றேன் எனதெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் பலமுறை பல ஆணைக்குழுக்களில் பதிந்துவிட்டோம். எந்த பலனும் இல்லை. இப்போது எப்படி நம்பிக்கை வைப்பது என காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

தன்னை நம்பும்படி அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

அரச வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு

east tamil

எட்கா ஒப்பந்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் – கலாநிதி நந்தலால் வீரசிங்க

east tamil

2025 பெப்ரவரி முதல் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

Pagetamil

அர்ச்சுனாவை நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்குங்கள்: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு!

Pagetamil

Leave a Comment