அங்குனகொலபெலெச சிறைச்சாலைக்கு விறகு கொண்டு செல்லும் போர்வையில் தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில், சிறைக்கு விறகு வழங்கும் லொறிக்குள் விசேஷமாக தயாரிக்கப்பட்ட பெட்டியொன்றிற்குள் 570 சுருட்டுகள், 7 மொபைல் போன்கள், 3 சார்ஜர்கள் மற்றும் 3 டேட்டா கேபிள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
சிறைச்சாலைகளின் வரலாற்றில் தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்ல இப்படியான முயற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை.
லொறியின் சாரதி அங்குனகொலபெலெச பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1