யாழ்ப்பாணம் வட்டுகோட்டையில் 11.6 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக கட்டப்பட்ட அஞ்சல் அலுவலகம் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
அஞ்சல்துறை அபிவிருத்து ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது
வடக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் மதுமதி வசந்தகுமார் தலைமையில் நினழ்வு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் ஊடகம், தபால்த்துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஜெகவீர, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் மற்றும் வடக்கு மாகாண தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.