இலங்கையில் நேற்று 313 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டன, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 89,175 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று பேலியகொட கொத்தணியிலிருந்து 278 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர், சிறைகளில் இருந்து 24 பேர், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 11 பேரும் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று 219 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85,944 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் 2,693 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் 396 நபர்கள் கண்காணிப்பில் உள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1