தமிழ் யுவதியொருவர் தற்கொலை செய்த விவகாரத்தில் நீர்கொழும்பில் விடுதி உரிமையாளர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யுவதியுடன் நெருக்கமாக இருந்து வீடியோ படம் பிடித்து அவரை மிரட்டி பணம் பறித்ததாக உரிமையாளர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு கடற்கரை வீதியில் அண்மையில் யுவதியொருவர் உயிரை மாய்த்திருந்தார். அவர் இறுதியாக எழுதிய கடிதத்தை ஆடைக்குள் மறைத்து வைத்திருந்தார்.
அந்த கடிதத்தில் பல அதிர்ச்சி தகவல்களை வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட விடுதி உரிமையாளர் யுவதியுடன் நெருக்கமாக இருந்து அதை வீடியோ படம் பிடித்து, பின்னர் மிரட்டி பணம் பறித்துள்ளார். அவரது தொல்லை தாங்க முடியாமல் யுவதி உயிரை மாய்த்துள்ளார்.
யுவதி உரை மாய்த்து சில நாட்கள் கடந்த பின்னர் விவகாரம் ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, தற்போது விடுதி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.