முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தன்னுடைய பதவியிலிருந்து விலகுவதாக இன்று (18) சபையில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்
இது தொடர்பில் கடந்த 15 ஆம் திகதி உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அவர்களுக்கு எழுத்து மூலமாக சமர்ப்பித்து உள்ளதாகவும் இன்று நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச சபை அமர்வின்போது தான் உத்தியோகபூர்வமாக பதவி விலகிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறார்
பிரதேச சபை தேர்தல் நிறைவடைந்த பின்னர் வவுனியா தெற்கு பிரதேச சபைக்கும் கரைத்துறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தெரிவில் ரெலோ மற்றும் புளொட் கட்சிகளுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், புளொட்டை சேர்ந்த அவர் உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ஏப்ரல் 1ஆம் திகதி என்னுடைய பதவிவிலகலை அறிவிப்பேன் என்றே தெரிவித்துள்ளார்.
கட்சிகளிற்கிடையிலான ஒப்பந்தப்படி, கரைத்துறைப்பற்று தவசாளரும் பதவிவிலகுவார் என நம்பி, வவுனியா தெற்கு தவிசாளரான ரெலோ உறுப்பினர் பதவியை துறந்தார். கரைத்துறைப்பற்று தவசாளர் முறையாக பதவிவிலகல் கடிதம் அனுப்பாததை அறிந்ததும், அவர் தனது பதவிவலகல் கடிதத்தை வாபஸ் பெற்றமை குறிப்பிடத்தக்கது.