தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவை கடந்த ஒக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
திருமணமாகி விட்டாலே நடிகையின் மார்க்கெட் அடிவாங்கிவிடும். இந்நிலையில் திருமதி ஆன பிறகு காஜல் அகர்வால் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் படம் குறித்து ரசிகர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சீனியர் ஹீரோவான நாகர்ஜுனாவை வைத்து பிரவீன் சத்தாரு இயக்கும் படத்தில் காஜல் அகர்வால் தான் ஹீரோயின். விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம்.
இந்நிலையில் அந்த படத்தில் நடிப்பது பற்றி காஜல் அகர்வால் பேட்டி ஒன்றில் கூறியதாவது,
தெலுங்கு திரையுலகில் என் பயணம் சிறப்பாக இருக்கிறது. இங்குள்ள மக்கள் என் மீது பாசமாக இருக்கிறார்கள். நான் பிரவீன் சத்தாரு இயக்கத்தில் நாகர்ஜுனா ஜோடியாக நடிக்கவிருக்கிறேன். என் கெரியரிலேயே இது தான் மிகவும் ஸ்பெஷலான கதாபாத்திரமாக இருக்கப் போகிறது.
படப்பிடிப்பில் கலந்து கொள்ள காத்துக் கொண்டிருக்கிறேன். சிறுவயதில் இருந்தே எனக்கு நாகர்ஜுனா மீது கிரஷ். இந்நிலையில் அவருடன் சேர்ந்து நடிக்கப் போவதில் சந்தோஷமாக இருக்கிறது. நான் டோலிவுட்டில் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் இதுவரை நடிக்காததால் த்ரில்லாக இருக்கிறது என்றார்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ள ஆச்சார்யா படம் மே 13ஆம் திகதி ரிலீஸாகிறது. நண்பர் ராம் சரணுக்காக அவர் அப்பாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டார் காஜல் என்று கூறப்பட்டது.