கவர்ச்சிக் கன்னியுடன் அண்ணாச்சி ரொமான்ஸ்: வைரலாகும் புகைப்படங்கள்!

Date:

தனது கடை விளம்பரத்தில் நடிக்கத் துவங்கிய லெஜண்ட் சரவணன் தற்போது கோலிவுட்டில் ஹீரோவாகிவிட்டார். இந்த வயதில் லெஜண்ட் ஹீரோவா, யார் அவரை வைத்து படம் தயாரிக்கிறார்கள் என்று எல்லாம் கேட்கக் கூடாது. வயதானாலும் இன்னும் இளைஞர் போன்று இருக்கும் லெஜண்ட், தனது படத்தை தானே தயாரிக்கிறார்.

பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் அந்த படத்தை ஜே.டி. மற்றும் ஜெர்ரி ஆகியோர் இயக்கி வருகிறார்கள். லெஜண்ட் படத்திற்காக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். அம்மணி நிச்சயம் பெரிய தொகை கேட்டிருப்பார். ஆனால் அதெல்லாம் அண்ணாச்சிக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை.

லெஜண்ட் தற்போது ஊர்வசி ரவ்தெலா, விவேக் ஆகியோருடன் மணாலியில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பில் அவர் ஊர்வசியின் கை கோர்த்து நடந்தது மற்றும் ஸ்டைலாக போஸ் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

முன்னதாக ஸ்டண்ட் காட்சியை படமாக்கியபோது லெஜண்ட் பலரை அடித்து நொறுக்கிய புகைப்படங்கள் வெளியாகின. லெஜண்ட் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ரோபோ ஷங்கர் ட்விட்டரில் வெளியிட்டார். லெஜண்ட் படத்தில் விவேக் இருக்கிறார் என்றால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக் லெஜண்ட் சரவணனும், ஹரி நாடாரும் தான். ஒரு பக்கம் லெஜண்ட் ஹீரோவாகிவிட்டார். மறுபக்கம் ஹரி நாடாரும் ஹீரோவாகி காதல் செய்து கொண்டிருக்கிறார். 2கே அழகானது காதல் என்கிற படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்து வருகிறார் ஹரி நாடார். அந்த படத்தின் ஹீரோயின் வனிதா விஜயகுமார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் நெருக்கடி: அரச ஊழியர்களுக்கு புதன் கிழமைகளிலும் விடுமுறை!

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்கு 2025-ம் ஆண்டுக்கான...

கியூபாவுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது, ஈரானுக்குப் பிறகு நடவடிக்கை சாத்தியம்: டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா விரைவில் கியூபாவுடன் ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்