Pagetamil
இந்தியா

அந்தரங்க வீடியோவை வைத்து மனைவியை மிரட்டி, வேலைக்காரியுடன் சல்லாபம்: கிரிக்கெட் பயிற்சியாளர் கைது!

ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மனைவியை மிரட்டிய கிரிக்கெட் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.

சென்னை பெசன்ட்நகர், அப்பர் தெருவை சேர்ந்தவர் ஹீமா ஜெமி (36). எம்.பி.ஏ. பெண் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் பெயர் பால்சாமுவேல் தாமஸ் (41). கிரிக்கெட் பயிற்சியாளர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

இந்த நிலையில் தனது கணவர் பற்றி ஹீமா ஜெமி சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பெற்றோர்கள் சம்மதத்துடன் எனது திருமணம், 2008ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் நடந்தது. திருமணத்தின்போது 120 பவுன் தங்க நகைகள் எனக்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

15 பவுன் சங்கிலி, 6 பவுன் கைச்செயின் மற்றும் வைர மோதிரம் ஆகியவை எனது கணவருக்கு எனது பெற்றோர், அணிவித்தனர். ரூ.25 லட்சத்துக்கும் மேல் செலவு செய்து வெகு விமரிசையாக எனது திருமணத்தை நடத்தினார்கள்.

தங்களது கடமை முடிந்துவிட்டதாக எனது பெற்றோர் வெளிநாடு சென்று விட்டனர். எனது கணவரின் சித்ரவதை விளையாட்டுகளும் தொடங்கியது. முதலில் அவரது தங்கை திருமணத்துக்கு 35 பவுன் நகைகள் கேட்டார். எனது பெற்றோர் அதை வாங்கி கொடுத்தனர். திருமண பரிசாக எனக்கு கொடுத்த காரை விற்று பணத்தை எனது கணவர் எடுத்து கொண்டார்.

நான் வேலைக்கு போக மாட்டேன், மாதம் ரூ.1 லட்சம் எனது செலவுக்கு வேண்டும் என்று எனது கணவர் கேட்டார். அதை கொடுக்க முடியாததால், ரூ.50 லட்சம் மொத்தமாக கொடுக்க வேண்டும், என்று கேட்டார். பின்னர் பாளையங்கோட்டையில் இருந்து சென்னைக்கு குடும்பத்தை மாற்றினார். சைதாப்பேட்டையில் வாழ்ந்தோம். என்னை வேலைக்கு போகச்சொன்னார். அவரது வற்புறுத்தலால் நான் வேலைக்கு போனேன்.

வேலைக்காரியுடன் சல்லாபம்

பின்னர் வீட்டு வேலை செய்ய அவரது உறவுக்கார பெண்ணை அழைத்து வந்து எங்களுடன் தங்க வைத்தார். வேலைக்கார பெண் அழகாக இருப்பதாகவும், நான் கருப்பாக அழகு இல்லாமல் இருப்பதாகவும் கூறி என்னை அடித்து துன்புறுத்தினார். எனது கணவர் செய்த எல்லா கொடுமைகளையும், நான் சகித்து வந்தேன்.

நான் வீட்டில் இருக்கும்போதே வேலைக்கார பெண்ணுடன் உல்லாசமாக இருந்தார். அதை தடுத்தபோது, வேலைக்கார பெண்ணோடு சேர்ந்து என்னை தாக்கினார். உச்சகட்ட கொடுமையாக வேலைக்கார பெண் கர்ப்பமாக இருப்பதாக சொன்ன என் கணவர், என்னை கொலை செய்து விட்டு, வேலைக்கார பெண்ணை திருமணம் செய்யப்போவதாக சொன்னார். மேலும் என்பெயரில் உள்ள சொத்துகளை எழுதி கேட்டார்.

படுக்கை அறை காட்சிகள்

எனக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி வெளியில் சொன்னால், என்னுடன் என் கணவர் ஆரம்பகாலத்தில் இருந்த படுக்கை அறை ரகசிய ஆபாச காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டினார். எனக்கு தெரியாமல் செல்போனில் அந்த படுக்கை அறை காட்சிகளை எடுத்து வைத்துள்ளதாகவும், எனது கணவர் சொன்னார்.

மேலும் அவர் சென்னையில் கிரிக்கெட் பயிற்சி மையம் நடத்துவதாக சொல்லி அதற்கும் பணம் கேட்டார். கிரிக்கெட் ‘பேட்’டால் அடிக்கடி நான் அவரிடம் அடி வாங்குவேன். எனது கிரெடிட் கார்டை பயன்படுத்தி வேலைக்கார பெண்ணுக்கு நகைகள் வாங்கி கொடுத்து அழகு பார்த்தார்.

வேலைக்கார பெண்ணாக வந்து, எனது குடும்ப வாழ்க்கையை பறித்துக்கொண்ட அந்த பெண் மற்றும் எனது கணவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, என்னையும், எனது மகனையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில், மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாரதி 7 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

புகார் கூறப்பட்ட பால்சாமுவேல் தாமஸ் கைது செய்யப்பட்டார். வேலைக்கார பெண் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ‘புஷ்பா’ படக்குழு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி

Pagetamil

“என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்வேன், செருப்பு அணிய மாட்டேன்!” – அண்ணாமலை கொந்தளிப்பு

Pagetamil

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல் சம்பவம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

3 கணவர்களிடமும் இயற்கைக்கு மாறான உறவு குற்றச்சாட்டு: பெண் கைது!

Pagetamil

Leave a Comment