இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட லுாசி என்ற யானை, கனடாவின் மிருகக்காட்சி சாலையில் மோசமான சூழலில் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டு, கொழும்பிலிலுள்ள கனடா தூதரகத்தில் மனு கையளிக்கப்பட்டது. அந்த யானையை சுதந்திரமான சூழலில் விடுவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
1977 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்டலூசி என்ற யானை, இப்போது கனடாவின் எட்மண்டன் மிருகக்காட்சிசாலையில் சரியான வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகிறது என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
இலங்கை ரமண்ய நிகாயவின் தலைமை மகாநாயக்கர் ஓமல்பே சோபித நா தேரர் தலைமையிலான போராட்டக்காரர்கள், கொள்ளுப்பிட்டியிலிருந்து கனேய உயர் ஸ்தானிகராலயம் வரை சென்று மகஜர் கையளித்தனர்.
1977 ஆம் ஆண்டில் சிறிய யானைக்குட்டி, தேசிய விலங்கியல் துறையால் ஒரு ஜெர்மன் தொழிலதிபருக்கு விற்கப்பட்டது. பின்னர், அவரால் கனடிய மிருகக்காட்சிசாலைக்கு 9789 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டதாக சோபித தேரர் தெரிவித்தார்.