வடமாகாண காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள் நாளை (18) அனுராதபுரத்திலிருந்து மீளவும் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படும் என தமிழ்பக்கம் அறிந்தது.
இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடந்த கலந்துரையாடலை தொடர்ந்து, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவருடன் தொலைபேசி உரையாடல் மேற்கொண்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆவணங்களை உடனடியாக, யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்ட போதும், இன்று ஆனுராதபுர அலுவலகத்தில் வாகன வசதி இருக்கவில்லை, அலுவலக வாகனம் திருத்தப்பணியில் இருக்கிறது என கூறப்பட்டது.
இதையடுத்து, நாளை யாழ்ப்பாண அலுவலகத்திலிருந்து சென்று ஆவணங்களை பெற்றுச்செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாளை வடக்கிலிருந்து செல்லும் அதிகாரிகள், ஆவணங்களை எடுத்து வருவார்கள்.