28.5 C
Jaffna
June 29, 2022
முக்கியச் செய்திகள்

அம்பிகை என் மனைவியேயல்ல; தற்கொலை மிரட்டல் விடுக்கிறார்; எனது பெயரை சட்டவிரோதமாக பாவிக்கிறார்: செல்வக்குமார்!

அம்பிகையை நான் சட்டரீதியாக திருமணம் செய்திருக்கவில்லை. எமக்கு நீதிமன்றம் விவகாரத்து வழங்கி விட்டது. ஆனால் அதை ஏற்காமல் அம்பிகை எனக்கு தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். நயாக்கரா நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார் என அதிரடியாக அறிவித்துள்ளார் பிரித்தானியாவிலுள்ள செல்வக்குமார்.

உண்ணாவிரத போராட்டத்தில் எனது பெயரை சட்டவிரோதமாகவே பாவிக்கிறார். இந்த பித்தலாட்டக்காரிக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட காணொளியில்,

எனது இயற்பெயர் கதிரவேலு செல்வகுமார். நான் 1991ஆம் ஆண்டு கனடாவிற்கு வந்தேன். 1994 ஜூலை10ஆம் திகதி திருமணம் செய்து கொண்டேன். அந்த திருமண பந்தத்தில் இருந்து எனக்கு இரண்டு குழந்தைகள். ஒரு பெண்ணும் ஒரு ஆணும். 2015 ஆம் ஆண்டிலிருந்து எங்களுக்குள் மனச் சிக்கல்கள் ஏற்பட்டு திருமணம் சரிவரவில்லை. 2017ம் ஆண்டில் இருந்து நான் தனியாக வசித்து வந்தேன். அது முதல் நான் விவாகரத்துக்கு முயற்சி எடுத்து 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி நீதிமன்றம் ஊடாக விவாகரத்து கிடைத்தது.

2017 இல் இருந்து விவாகரத்துக்குப் இடைப்பட்ட காலத்தில் அம்பிகையுடன் பேசியதும் இரண்டு மூன்று முறை சந்தித்ததும் உண்மை. அந்த சந்திப்புகளிலும் எங்கள் பேச்சுவார்த்தைகளிலும் என்னால் அவருடன் திருமண பந்தத்தில் இணைய முடியாது என்ற முடிவை எடுத்து அவருக்கு சொல்லி கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

ஆனால் அந்த முடிவை அவர் எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து எனக்கு தற்கொலை மிரட்டல்கள் விடுத்துக்கொண்டிருந்தார். நயாகரா நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து விடுவேன் அல்லது இங்கேயே நஞ்சு குடித்து செத்து விடுவேன் என்றும் தனது மரணத்திற்கு நான்தான் காரணம் என்று எழுதி வைப்பேன் என்றெல்லாம் சொல்லிக் கொணடிருந்தார்.

அந்த கொலை மிரட்டல்களை தொடர்ந்தார். நான் அவருக்கு பல முறை சொல்லி, கடைசியில் எனது வட்ஸ்அப், பேஸ்புக், மின்னஞ்சல் என அனைத்து வழிகளிலும் அவரை புளொக் செய்தேன். அவரது தொடர்புகளை முழுமையாக அறுத்தேன்.

நான் விவாகரத்து செய்த கையோடு திருமண பந்தத்தை யோசித்தபோது, எனது மனைவியுடன் திருமண பந்தத்திற்கான உறவுகள் சரி வந்தது.

எனது புதிய உறவைத் தேடி நான் லண்டன் நகரம் வந்தபோது இவர் தேடிவந்து பல பிரச்சினைகள் கொடுத்தார். அப்பொழுது பலர் முன்னிலையில், இவரை நான் எந்த காலத்திலும் திருமணம் செய்யமாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டேன்.

ஆனால் அந்த சந்திப்புக்குப் பின்னர் ஒக்டோபர் மாதத்திலிருந்து இவர் யார் சொல்லியும் கேட்காமல், நான் சொல்லியும் கேட்காமல் அம்பிகை சீவரத்தினம் என்ற பெயரை அம்பிகை செல்வகுமார் என மாற்றி, சமூக வலைத்தளங்களில் பாவித்தார். அதை எடுத்து விடுங்கள் என நான் பலமுறை பல விதங்களில் கேட்டும் அவர் அதற்கு செவி சாய்க்கவில்லை.

கொஞ்ச நாளில் அடங்கி விடுவார் என நினைத்து எனது தனிப்பட்ட வாழ்க்கையை கவனித்தேன்.

ஆனால் கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இவர் உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித்து அதில் அம்பிகை செல்வக்குமார் என என்னுடைய பெயரையும் சேர்த்து கூறியிருந்தார். அப்பொழுது அதை பார்த்த பொழுது எனக்கு மிகுந்த கோபம் வந்தது. ஆனாலும் பொது விஷயத்தில் இறங்கி செயல்படும்போது அதை நான் ஆரம்பத்திலேயே களங்கப்படுத்தினால், இதனால் எதுவும் நன்மை விளையஇருந்தால் அதை நான் தடுத்து விடக்கூடாது என்பதற்காக இன்று வரை நான் அமைதி காத்து வந்தேன்.

ஆனால் இப்பொழுது அவர் பொய்யோடு ஒரு போராட்டத்தை ஆரம்பித்து ஒரு பொய்யோடு போராட்டத்தை முடித்ததனால் , அவரது அரசியல் பித்தலாட்டம் கருதி விமர்சிப்பவர்கள் எனது பெயரையும் சேர்த்து களங்கப்படுத்தி வருகிறார்கள். ஆகவே இந்த இடத்தில் விமர்சகர்கள், அவரது எதிரிகள், அவருடன் கூட நின்ற துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் எல்லோரிடமும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் இவருடைய அரசியல் பாதைக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இவரோடு எனக்கு எந்த காலத்திலும் சமூக ரீதியாகவும், சட்டரீதியாக, திருமணம் நடைபெறவில்லை.

சட்டத்திற்கு புறம்பாவவே எனது பெயரை, தன்னுடைய பெயருடன் சேரத்து பாவித்து வருபவர்கள்.

இந்த நிமிடத்திலிருந்து அவரது அரசியல் பித்தலாட்டத்தை விமர்சிப்பவர்கள் எனது பெயரையும் சேர்த்து பாவிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். இந்த அரசியல் பித்தலாட்டக்காரிக்கும் எனக்கும் எந்த சந்தரப்பத்திலும் திருமணம் நடக்கவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3

Related posts

அதிகபட்ச எண்ணிக்கை: இன்று 1,913 பேருக்கு தொற்று!

Pagetamil

21ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க ஆலோசனை!

Pagetamil

யாழில் 11 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் முதற்கட்ட தடுப்பூசி: நாளை 12 கிராமசேவகர் பிரிவுகளில் ஆரம்பம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!