அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக, அமைச்சர் விமல் வீரவன்ஸ தவறான மற்றும் தீங்கிழைக்கும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தடைசெய்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மார்ச் 30 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் இந்த கட்டளை உத்தரவு கொழும்பு மாவட்ட நீதிபதி அருண அளுத்கேயினால் வழங்கப்பட்டது.
இதேவேளை, நாட்டின் மூன்று தனியார் தொலைக்காட்சி வலையமைப்புகளுக்கும் நீதிபதி ஒரு உத்தரவு பிறப்பித்தார்.
அமைச்சர் வீரவன்சவின் அறிக்கைகளை தங்கள் வலையமைப்புகள் வழியாக ஒளிபரப்புவதன் மூலம் விளம்பரப்படுத்துவதைத் தவிர்க்குமாறு உத்தரவிடப்படப்பட்டுள்ளது.
மார்ச் 09 ஆம் திகதி விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துக்கள் அவரது நற்பெயருக்கு தீங்கு விளைவித்ததாக குறிப்பிட்டு, ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.