மூன்றாம் பாலினத்தவரையும் கண்ணியமாக நடத்த வேண்டுமென, கோட்டை நீதிவான், பொலிசாரை அறிவுறுத்தியுள்ளார்.
திருநங்கையொருவருடன் பொலிசார் கண்ணியக்குறைவாக நடந்த குற்றச்சாட்டையடுத்து, இந்த அறவுறுத்தலை விடுத்தார்.
ஒவ்வொரு பாலினத்தையும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என கோட்டை நீதிவான் பிரியந்த லியானகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.
எந்தவொரு நபரையும் அவர்களின் பாலின வேறுபட்டதால் சந்தேகப்படக்கூடாது என்று நீதிமன்றம் மேலும் கூறியது.
இலங்கையில் பாலியல் நோக்குநிலையின் அடிப்படையில் தனிநபர்கள் காவல்துறையினரால் மோசமாக நடத்தப்படுவதாக பல குற்றச்சாட்டுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.




