கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரி மாணவர்கள் தங்களது பிரதேசத்தில்
அதிகரித்துள்ள போதைப்பொருள் பானைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (15)
விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பாடசாலை மாணவர்கள் அனைவரும் தங்கள் சீருடையில் கடந்த வாரம்
கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்த அருளம்பலம் துஸ்யந்தனின்
புகைப்படம் கறுப்பு பட்டியுடன் பொறிக்கப்பட்டு அணிந்து போதைப் பொருள் பானைக்கு எதிராக விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.
வட்டக்கச்சியில் மூன்று பிள்ளைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தானும்
தற்கொலைக்கு முயன்ற இளம் தாயின் சம்பவமும், கத்திக்குத்துக்கு இலக்காகி
உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் தந்தையின் சம்பவமும் போதை பொருள் பானையின்
விளைவால் ஏற்பட்டது.எனத் தெரிவித்த மாணவர்கள், போதைப்பொருள்
பாவனையாளர்களால் மாணவர்களுக்கும் பல்வேறு வகையில் அச்சுறுத்தல்
ஏற்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே தங்களது பிரதேசத்தில் அதிகரித்து வருகின்ற சட்டவிரோத போதைப் பொருள்
மற்றும் மதுபானம் என்பவற்றை தடுத்து நிறுத்த சம்மந்தப்பட்ட அனைவரு்ம்
முன்வர வேண்டும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.