வவுனியா நீதிமன்றிற்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிய பெண் உட்பட இருவரை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய குற்றத்தடுப்பு பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
கடந்தவாரம் வவுனியா நீதிமன்றிற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டிருந்தது. அது தொடர்பாக உரிமையாளரால் வவுனியா பொலிசில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் வவுனியா கிச்சிராபுரத்தை சேர்ந்த பெண் ஒருவரையும் உக்கிளாங்குளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரையும் கைதுசெய்யதுள்ளனர்.
திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் இராசேந்திரங்குளம் பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட இருவரும் நாளைய தினம் நீதிமன்றில் முற்ப்படுத்த உள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1