மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வரும் போராட்ட காரர்களை கைது செய்யும் நோக்குடன் மட்டக்களப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட ஏராளமான பொலீசார் பஸ் வண்டி மற்றும் பொலீஸ் வாகனங்களில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளனர்.
குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதி மன்ற தடை உத்தரவு உள்ளது எனக் கூறியதுடன். ஒலிபெருக்கி மூலம் நீதிமன்ற தடை உத்தரவை வாசித்து போராட்ட காரர்களை அகன்று செல்லுமாறும் கட்டளையிட்டனர்.
ஆனால் போராட்டக்காரர்கள் போராட்டத்தை விட்டு அகன்று செல்ல மறுத்ததாலும் குறித்த சம்பவங்களை ஊடகவியலாளர்கள் பதிவு செய்ததை அவதானித்த பொலீசார். நீதிமன்ற தடை உத்தரவை வாசித்து விட்டு அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றுவிட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1