மேல் மாகாணப் பாடசாலைகள் தவிர நாட்டில் உள்ள ஏனைய பாடசாலைகளில் இன்று (15) முதல் அனைத்து வகுப்புக்களிற்கும், இந்த ஆண்டின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.
மேல் மாகாண பாடசாலைகளில் 05, 11, 13 ஆம் தரங்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பமாகவிருக்கின்றன. மேல் மாகாணத்தில் உள்ள 1 முதல் 4, 6 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 19ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
குறித்த வகுப்புக்களில் உள்ள சகல மாணவர்களை அழைப்பதா அல்லது பகுதியளவான மாணவர்களை அழைப்பதா என்பது பற்றி பாடசாலைகளில் நிலவும் இடவசதிகளைக் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1