இஸ்லாமிய தீவிரவாதக் குழுவுக்கு நிதியளித்ததாகக் கூறப்படும் ஒருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பாணந்துறையை சேர்ந்த 37 வயதான ஒருவர், போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் சில மாதங்களுக்கு முன்பு பேலியகொட பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, டுபாயில் இருந்து அவரது வங்கிக் கணக்கிற்கு பெருமளவு பணம் வைப்பிலிடப்பட்டதை பொலிசார் கண்டறிந்தனர்.
ஒரு தீவிரவாதக் குழுவால் பராமரிக்கப்படும் கணக்குகளுக்கு நிதி வைப்பிலிடப்பட்டதையும் பொலிசார் கண்டறிந்தனர்.
இதைத் தொடர்ந்து அவர் மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1