29.5 C
Jaffna
April 10, 2025
Pagetamil
இந்தியா

இந்தியாவிலுள்ள இலங்கை தமிழ் அகதிகளிற்கும் குடியுரிமை: தி.மு.க அறிவிப்பு!

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை அகற்றவும், இந்தியாவில் அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவும் தமது கட்சி தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக திமுக தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது. குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை திமுக எதிர்த்ததாகவும்,  அதற்கு எதிராக பிரச்சாரம் செய்ததாகவும், சட்டத்தை ரத்து செய்யுமாறு அழுத்தம் கொடுத்து ஒரு கோடி கையொப்பங்களை சேகரித்து தமிழகத்தில் ஒரு பிரச்சாரத்தை நடத்தியதாகவும் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், இலங்கை அகதிகளையும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் சேர்க்கவும், இந்தியாவில் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவும் மத்தி அரசிடம் கோரப்படும் என்று கூறியுள்ளது.

“தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும். குடியுரிமை திருத்த சட்டத்தை அகற்றுவதற்காக குரல் எழுப்புவேன் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

 

இதையும் படியுங்கள்

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தேர்தல் நடைமுறை அறிவிப்பு: அண்ணாமலை, நயினாருக்கு சிக்கல்?

Pagetamil

‘பாமகவுக்கு இனி நானே தலைவர்; அன்புமணி செயல் தலைவர்’ – ராமதாஸ் அறிவிப்பு

Pagetamil

மும்பை தாக்குதல் தீவிரவாதி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா: சிறப்பு விமானத்தில் இன்று அழைத்து வரப்படுகிறார்

Pagetamil

தண்​டவாளத்​தில் படுத்து ரீல்ஸ் எடுத்​தவர் கைது

Pagetamil

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!