பிரித்தானியாவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்பிகை செல்வக்குமாரிற்கு ஆதரவாக கென்டன் பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிற்கும், பிரித்தானிய காவல்த்துறைக்குமிடையில் அமைதியின்மை ஏற்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அம்பிகை செல்வகுமாரின் வீட்டின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் கலைக்க முயன்றபோது, அமைதியின்மை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணை பொலிசார் கைது செய்தனர். அவரது கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டக்காரர்கள் பொலிசாரை சூழ்ந்தனர்.
பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.ாக்கப
இதேவேளை, பெண்ணொருவர் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹாரோவின் கென்டன் வீதியில் இந்த போராட்டம் நடந்தது. எமக்கு நீதி வேண்டுமென அவர்கள் கோசமெழுப்பினர்.
போராட்டக்காரர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.
பிரித்தானியாவில் போராடும் அம்பிகை செல்வக்குமரனிற்கு ஆதரவாக ஹாரோ, கெண்டன் வீதியில் போராட்டம்.. பொலிசாருடன் முறுகல்… ஒருவர் கைது pic.twitter.com/Pu7H02yOVi
— Pagetamil (@Pagetamil) March 15, 2021