போலி செய்திகளை சமூகமயப்படுத்த எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கைத்தேர்ந்தவர் என அமைச்சர் சி.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மெராயா பகுதியில் இன்று (15) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
தற்போதைய ஜனாதிபதி திருடனாக இருந்ததும் இல்லை. திருடனாக மாற போவதும் இல்லை. மக்கள் நம்பிக்கைக்கு அமைய ஜனாதிபதி ஆட்சி புரிகின்றார். அதேபோல் ரணிலும் கள்ளன். ரணிலும் பொய் கூறுவதில் சிறந்தவர். வாக்குகளை பெறுவதே அவர்களின் நோக்கம். வாக்குகளை பெற்ற பின்னர் அவர்கள் இந்த பகுதிக்கு வருவதில்லை.
கொழும்பில் இருந்தே அவர்கள் மக்கள் பிரச்சினையை தீர்த்தனர். யாழ்ப்பாணத்திற்கு அதிகளவு சேவைகளை செய்தவர் தற்போதைய பிரதமராவார்.
யானை, யானை என்றார்கள் அதில் எந்த புண்ணியமும் இல்லை. தற்போது தொலைப்பேசி அதிலும் புண்ணியமில்லை. தற்போது தொலைப்பேசியில் மின் சேமிப்பு இல்லை. அது செயலிழந்துள்ளது.
இப்போது அது வேலை செய்வதில்லை. நாம் மக்களின் பொறுப்பை ஏற்றது போல் செயற்படுகின்றோம். ஆகவே இரண்டு கால் யானையையும் நாம் விரட்டியுள்ளோம். யானை வேலிகளை அமைக்க உள்ளோம். அதனை எடுத்த எடுப்பில் செய்ய முடியாது. எமது ஆட்சியில் யானை – மனித மோதலுக்கு தீர்வு வழங்கப்படும்” என்றார்.ி