25.3 C
Jaffna
February 3, 2025
Pagetamil
கிழக்கு

போராட்டக்காரர்களை கைது செய்ய முயற்சி?: நீதிமன்ற தடை உத்தரவோடு வந்த பொலிஸ் அதிகாரிகள்!

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வரும் போராட்ட காரர்களை கைது செய்யும் நோக்குடன் மட்டக்களப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட ஏராளமான பொலீசார் பஸ் வண்டி மற்றும் பொலீஸ் வாகனங்களில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளனர்.

இன்று மாலை சுமார் 3 மணியளவில் மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் சுழற்சி முறையில் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கு வந்த பொலீசார் அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆகியோரிடம் குறித்த இடத்தை விட்டு அகன்று செல்லுமாறும்.
குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதி மன்ற தடை உத்தரவு உள்ளது எனக் கூறியதுடன். ஒலிபெருக்கி மூலம் நீதிமன்ற தடை உத்தரவை வாசித்து போராட்ட காரர்களை அகன்று செல்லுமாறும் கட்டளையிட்டனர்.

ஆனால் போராட்டக்காரர்கள் போராட்டத்தை விட்டு அகன்று செல்ல மறுத்ததாலும் குறித்த சம்பவங்களை ஊடகவியலாளர்கள் பதிவு செய்ததை அவதானித்த பொலீசார். நீதிமன்ற தடை உத்தரவை வாசித்து விட்டு அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றுவிட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது

east tamil

திருகோணமலையில் சிலம்பாட்ட பொங்கல் திருவிழா

east tamil

கம்பளை வீதியில் விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்!

east tamil

வேலூர் இந்து மயானத்தை சீரமைக்க கோரிக்கை

east tamil

கங்குவேலியில் உழவர் தின நிகழ்வு

east tamil

Leave a Comment