சிவனொளிபாதமலைக்கு வந்து காணாமல் போன இளைஞன் ஒருவரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மீட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரத்தை சேர்ந்த 32 வயதுடைய இளைஞனே இன்று காலை 10 .30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் தனது 7 நண்பர்கள் சகிதம் சிவனொளிபாதமலைக்கு சென்று நேற்று (13) திரும்பியுள்ளார்.
இவ்வாறு திரும்பிய அவர் கொத்மலை ரம்பொடை ஆற்றுப்பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கி நேற்றிரவு மதுபானம் அருந்தியுள்ளனர்.
மது அருந்திய நிலையில் அதிக போதை காரணமாக அவர் கொத்மலை ரம்பொட ஆற்றிற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு விழுந்த இளைஞன் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று (14) காலை 10 மணியளவில் அவர் மயக்கமான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவரின் உடலில் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயங்களுடன் சுயநினைவற்ற நிலையில் மீட்ட இளைஞன் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
–க.கிஷாந்தன்-