25 C
Jaffna
January 12, 2025
Pagetamil
மலையகம்

கூட்டு ஒப்பந்தம் இனிமேல் முத்தரப்பு ஒப்பந்தமாக இருக்க வேண்டும்: எம்.பி.இராதாகிருஷ்ணன்

கூட்டு ஒப்பந்தம் இனிமேல் முத்தரப்பு ஒப்பந்தமாக இருக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று (14) அட்டன் மலையக மக்கள் முன்னணியின் தலைமைக்காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம பேச்சாளராக சிரேஸ்ட விரிவுரையாளரும் மனித உரிமை மற்றும் பால்நிலை செயற்பாட்டாளருமான திருமதி. சோபனா ராஜேந்திரன் கலந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், செயலாளர் நாயகமும் பேராசிரியருமான சங்கரன் விஜயசந்திரன், மகளிர் முன்னணியின் உப தலைவி திருமதி சுவர்ணலதா இளங்கோவன் மகளிர் முன்னணியின் பிரதி செயலாளர் கிருஸ்ணவேனி விஜயகுமார் தலைமைப் பேச்சாளராக பேராதெனிய பழ்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும் மனித உரிமை மற்றும் பால்நிலை செயற்பாட்டாளருமான திருமதி சோபனா ராஜேந்திரன் முன்னணியின் பிரதி தலைவர் ஏ.லோரன்ஸ் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம் மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் கே.சுப்பிரமணியம் நிதிச் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் மலையக மகளிர் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது மலையக மக்கள் முன்னணின் ஆரம்ப கால உறுப்பினரும் முன்னணியின் கவுன்சில் உறுப்பினருமான அனைத்து சந்தர்ப்பத்திலும் துணிச்சலுடன் ஒரு பெண்ணாக செயற்பட்ட திருமதி கல்யாணி திலகேஸ்வரன் மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரும் மனித உரிமை மற்றும் பால்நிலை செயற்பாட்டாளருமான திருமதி சோபனா ராஜேந்திரன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

‘மலையக மக்கள் முன்னணி அண்மைக்காலமாக பல துன்பங்களை சந்தித்து வருகின்றது. நான்கு பக்கங்களிலும் நெருக்கடி. குறிப்பாக அனுசா சந்திரசேகரனின் விலகல் மற்றது அரவிந்தகுமாரின் செயற்பாடு, தமிழ் முற்போக்கி கூட்டணியின் அழுத்தம் அத்துடன் எதிர்க் கட்சியில் இருக்க வேண்டிய நிலை. ஏன்பன முக்கியமானவை. இவற்றுக்கு மத்தியிலேயே பொதுச் செயலாளராக பேராசிரியர் விஜேசந்திரன் செயற்படுகின்றார். அனைத்தும் இறுகியுள்ளது. ஆகவே அங்கத்தவர்களின் ஒற்றுமயே இதிலிருந்து மீள ஒரே வழியாகும். 2025 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தை ஆளக்கூடிய வகையில் மலையக மக்கள் முன்னணி உருவாகும்.

கூட்டு ஒப்பந்தம் இனிமேல் முத்தரப்பு ஒப்பந்தமாக இருக்க வேண்டும். ஏனேனில் மலைக மக்களின் பிரச்சினை இதன்போது அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தப்படும். தற்போது கூட்டு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்களும், கம்பனிகளும் அகைச்சாத்திடுகின்றன. எனவே மூன்றாவது தரப்பாக அரசாங்கத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.

நாட்டில் புரையோடி போயுள்ள இன பிரச்சினையை தீர்க்க சிங்களவர்களின் ஒத்துழைப்பும் அவசியம். அதேபோல் பெண்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டுமாயின் ஆண்களின் அனுசரனை அவசியம். தற்போதைய நிலையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பெரும்பான்மையினர் தம்வசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே தற்போது வடமாகாண காணி ஆவணங்கள் அநுராதபுரத்திற்கு மாற்றப்படுகின்றன. ஆகவே மக்களின் உரிமைகளை பறிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.’ என்றார்.

க.கிஷாந்தன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

Update – டிக்கோயா ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

பிரவாசி பாரதிய திவாஸ்: இந்தியத் தலைவர்களை சந்தித்த செந்தில் தொண்டமான்

east tamil

கொட்டகலை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் – கார் மோதி விபத்து

east tamil

16 வயது மாணவி மாயம்

Pagetamil

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் கைது

east tamil

Leave a Comment