28.6 C
Jaffna
December 22, 2024
Pagetamil
இலங்கை

ஒரு தலை காதலால் வெறிச்செயல்: வட்டக்கச்சி கலாப காதலனுடன் பெற்றோர், சகோதரனும் கைது!

கிளிநொச்சி, வட்டக்கச்சியில் கலாப காதலனின் குடும்பத்தில் 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளி ஒருவரின் மகளை ஒரு தலையாக காதலித்து, மாணவியை பரீட்சை எழுத விடாமல் தொல்லை கொடுத்து, வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தின் கலாப காதலன் ஒருவன், அண்மையில் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்திருந்தான். அருளம்பலம் துஷ்யந்தன் (31) என்பவரே உயிரிழந்தார்.

மாற்றுதிறனாளியின் மகளுடன் துணையாக சென்ற இளைய சகோதரனை தாக்கி, மாணவிக்கு தொல்லை கொடுத்து சம்பவத்தை கண்டித்தமையினாலேயே இந்த குரூரம் நடந்தது.

17 வயதான இரண்டு மாணவர்கள், அவர்களின் ஒருவரின் தாய் ஆகியோர், கொல்லப்பட்டவரின் வீட்டுக்கு சென்றனர். 17 வயதான ஒருவன், வீடு புகுந்து அவரை குத்திக் கொன்றான்.

குத்திக் கொலை செய்த மாணவனான கலாப காதலன், அவனது சகோதரன், அவர்களின் தாய், தந்தை என அந்த குடும்பத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன்ஈ அவனுடன் கூட சென்ற மாணவன், அவனது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் வரும் வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அன்று அடையாள அணிவகுப்பு இடம்பெறும்.

இதேவேளை, வட்டக்கச்சி பகுதியில் கடந்த சில வருடங்களில் 3 கொலைகள் நடந்துள்ளன. வட்டக்கச்சி பகுதியில் மூதாட்டியொருவரை தங்க நகை கொள்ளைக்காக கொடூரமாக கொல்லப்பட்டார் எனினும், அவன் மனநல பாதிப்பிற்குள்ளானவர் என பின்னர் விடுதலையாகி, வட்டக்கச்சியிலேயே குடியிருக்கிறார்.

இராமநாதபுரம் பகுதியில் ஒருவன் தனது மனைவியையே வெட்டிக் கொன்றார். வேறொரு பெண்ணுடனான கள்ளக்காதலையடுத்து, தனது மனைவியை வெட்டிக் கொன்றார். அவர் சிறையிலிருந்து பிணையில் விடுதலையாகி வருவதற்குள் கள்ளக்காதலி வேறு பகுதிக்கு சென்றுவிட, கொலையாளி வேறு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். வழக்கு நடந்து வருகிறது.

கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது துரித நடவடிக்கையெடுத்து, தண்டனை வழங்கப்படாத பட்சத்தில், தவறு செய்பவர்களிற்கு அது முன்னுதாரணமாக அமைந்து விடும் என பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

2025 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்களின் விபரம்!

Pagetamil

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படையின் மருத்துவ கப்பல்

east tamil

தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிப்பா?: வல்வெட்டித்துறை மக்கள் போராட்டம்!

Pagetamil

மாவீரர்நாளில் அரசியல் செய்யும் சிறிதரன் குழுவின் நடவடிக்கைக்கு முன்னாள் போராளிகள் எதிர்ப்பு

Pagetamil

சட்ட விரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்ட மூவர் கைது

east tamil

Leave a Comment