மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, சிறுநாவற்குளம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் இரு இளம் குடும்பஸ்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த வீதியூடாக மோட்டார் சைக்கிளில் மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்சிள் வீதியோரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன் போது சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துளள்தோடு, மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும் குறித்த நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.
செட்டிகுளத்திற்கு மரண சடங்கொன்றிற்கு சென்று விட்டு மீண்டும் மன்னார் நோக்கி வீடு திரும்பிய போதே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
இருவரும் மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளை திருமணம் செய்த 36 மற்றும் -38 வயதுடையவர்களே விபத்தில் பலியாகியுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.