உலகம்

சிங்கப்பூரில் ‘சுத்த சைவ கோழிக்கறி’ விற்பனைக்கு வருகிறது!

தாவர அடிப்­ப­டை­யி­லான சைவ கோழிக்­க­றி உணவுகள் சிங்­கப்­பூ­ரின் 11 உணவு நிறு­வ­னங்­களில் வரும் 18ஆம் திகதி முதல் விற்­ப­னைக்கு வர­வுள்­ளன.

‘நெக்ஸ்ட் ஜென் ஃபூட்ஸ்’ நிறு­வ­னம் ‘டிண்­டல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள சைவ கோழிக்­        க­றியை விற்­ப­னைக்­குக் கொண்டு வரு­கிறது.

அந்த நிறு­வ­னம் தயா­ரித்த ‘டிண்­டல் தை’ எனும் சைவ கோழிக்­கறி தண்­ணீர், சோயா,  தேங்­காய்க் கொழுப்பு, சூரி­ய­காந்தி எண்­ணெய் உட்­பட 9 பொருள்­கள் சேர்த்­துத் தயா­ரிக்­கப்­ப­டு­கிறது.

‘லிபி’ எனப்­படும் அந்த நிறு­வ­னத்­தின் சொந்­தத் தயா­ரிப்­பான தாவர அடிப்படை­யி­லான கொழுப்­பு­கள் மற்­றும் வாச­னைப் பொரு­ளும் அதில் சேர்க்­கப்­பட்­டுள்­ளன.

சுகா­தார மேம்­பாட்டு வாரி­யத்­தால் ‘ஆரோக்­கி­ய­மான தெரிவு’ எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்ள இந்த கோழிக்­க­றி­யில் ‘அன்­டி­ப­யோட்­டிக்’, ‘ஹார்­மோன்’ போன்­றவை இல்லை. இதில் பூரித கொழுப்­பின் அள­வும் சோடி­யத்­தின் அள­வும் குறைவு.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் 74 வருட காதல் வாழ்வும், அரசு பொறுப்பும்!

Pagetamil

ஜப்பானில் 187 அடி உயர சிலைக்கு 35 கிலோ எடையில் மாஸ்க்!

divya divya

உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் தலைவர்கள் உறுதி!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!