இன்றைய வானிலை!

Date:

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளர்களை கொல்ல இஸ்ரேல் சதித்திட்டம்: அமெரிக்கா எச்சரிக்கை!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது, ​​ஈரானின் உயர்மட்டப்...

சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ வழக்கு பிற்பகல் வரை ஒத்திவைப்பு

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ...

யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனு நிராகரிப்பு

நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரினால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்