Pagetamil
முக்கியச் செய்திகள்

யாழ் வைத்தியர் உள்ளிட்ட 12 பேருக்கு வடக்கில் கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் இன்று (12) மேலும் 12 பேருக்கு கோரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்களில் வட்டுக்கோட்டையில்  வைத்தியர் ஒருவரும் தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 409 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதிப்பட்டன.

அவர்களில் 12 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேர், மன்னார் மாவட்டத்தில் 2 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் சங்கானை மருத்துவ அதிகாரி பிரிவில் மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மூன்று பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பிய நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள். அவர்களிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கார்கில்ஸ் கட்டட தொகுதி பணியாளர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் அவரது துணைவிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் வெளிநாட்டு விசா விண்ணப்பித்த மாணவன்.

மற்றையவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட பெண் ஒருவர்.

மல்லாவி மீன் சந்தையில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

திருக்கேதீஸ்வரம் ஆலய மகா சிவாரத்திரி திருவிழாவுக்கு கடை அமைத்தவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மன்னார் வீதி சீரமைப்புப் ணியில் ஈடுபடும் பணியாளர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

பிள்ளையான் மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச்சட்டம்: 90 நாட்கள் தடுப்புக்காவல்!

Pagetamil

இனி அமெரிக்காவின் இடத்தை நாம் தீர்மானிக்க வேண்டும்!

Pagetamil

யாழ், கிளி, மன்னாரில் சங்கு அணியின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!