இலங்கை அணியின் சகலதுறை வீரர் அஞ்சலோ மத்யூஸ், மேற்கிந்தியத்தீவுகளிற்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார். மீதமுள்ள இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் ஆடமாட்டார்.
இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள ஒரு சுருக்கமான செய்திக் குறிப்பில், குடும்ப விடயம் காரணமாக மத்யூஸ் நாடு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் காரணமாக அவர் மீண்டும் அணியில் இணைய முடியாது.
மேற்கிந்தியத்தீவுகள் தொடரில் மத்யூஸ் மோசமான பெறுபேற்றை வெளிப்படுத்தினார்.
இரு அணிகளிற்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. இறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
முதல் டெஸ்ட் மார்ச் 21 ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் 29 ஆம் திகதியும் நடக்கிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1