27.8 C
Jaffna
December 23, 2024
Pagetamil
குற்றம்

படகில் கனடா செல்ல முயன்றவர்கள் சிக்கினர்!

கடல்வழியாக கனடாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற ஒரு குழு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

கல்பிட்டி, குரக்கன்ஹேன பகுதியில் நேற்று அதிகாலை கடற்படையினரால்  24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குரக்கன்ஹேனவின் கற்பிட்டி குளம் அருகே நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றை கடற்படையினர் சோதனை செய்தனர். இதன்போது லொறி சாரதி உள்ளிட்ட 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் படகில் கனடாவிற்கு செல்ல முயற்சித்தது விசாரணையில் தெரிய வந்தது.

இருபது ஆண்கள், ஒரு பெண்மணி, இரண்டு யுவதிகள், ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டனர். இவர்களில், ஒன்பது பேர் மட்டக்களப்பையும், ஆறு பேர் யாழ்ப்பாணத்தையும், ஐந்து பேர் முல்லைடித்தீவையும், மூன்று பேர் திருகோணமலையையும், ஏனையவர்கள் புத்தளத்தையும் சேர்ந்தவர்கள்.

இவர்களை கடத்த முயன்ற நபரும் இந்தக் குழுவில் இருப்பதாக கடற்படை சந்தேகிக்கிறது.

கைது செய்யப்பட்டவர்களும், லொறியும் கல்பிட்டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடமராட்சியில் 12 சைக்கிள் திருடிய எமகாதகன் கைது!

Pagetamil

குடு சலிந்து பிணையில் விடுதலை!

Pagetamil

வசமாக சிக்கிய ஜோடி!

Pagetamil

யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!

Pagetamil

போதைப்பொருள் வியாபாரியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு

Pagetamil

Leave a Comment