தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இந்திய தூதர் கோபால் பாக்ளேக்குமிடையில் இன்று (13) யாழ்ப்பாணத்தில் சந்திப்பு இடம்பெறுகிறது.
கொக்குவில் பகுதியிலுள்ள தனியார் விருந்தகமொன்றில் காலை 9 மணிக்கு சந்திப்பு இடம்பெறும்.
வடக்கிற்கு விஜயம் செய்துள்ள இந்திய தூதர், பல்வேறு தரப்புக்களுடன் நேற்று மாலை முதல் சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளார். அரசியல் கட்சிகள் பலவற்றுடகும் சந்திப்பு நடத்துகிறார்.
இது ஒரு சம்பிரதாய சந்திப்புத்தான். இந்த சந்திப்பை எதிர்வரும் மாகாணசபை தேர்தலிற்கு பயன்படுத்தலாமா என கூட்டமைப்பு தரப்பும் சிந்திப்பதால், கூட்டமைப்பின் மாகாணசபை வேட்பாளர்களான, இரண்டாம் மட்ட தலைவர்களும் பலர் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1