24.9 C
Jaffna
February 7, 2025
Pagetamil
உலகம்

வாங்கிய கடனை இன்று இரவுக்குள் திருப்பி தாருங்கள்: பாகிஸ்தானை நெருக்கும் அமீரகம்!

தாங்கள் வழங்கிய 1 மில்லியன் டொலர் பணத்தை திரும்ப அளிக்குமாறு ஐக்கிய அரபு அமீரகம் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

பாகிஸ்தானுக்கு கடனாக சுமார் 1 பில்லியன் டொலர் கடனை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியது . இதனை பாகிஸ்தான் தேசிய வங்கியில் டெபாசிட் செய்தது. இந்த நிலையில் இன்று இரவுக்குள் தாங்கள் வழங்கிய கடன் தொகையை திருப்பி அளிக்கும்படி ஐக்கிய அமீரகம் பாகிஸ்தான் உயர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது.

கடன் தொகையை அமீரகம் திருப்பி கேட்டுள்ளதால் பாகிஸ்தான் அரசு கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானில் பொருளாதாரம் சரிந்துள்ளது இந்த நிலையில் அமீரகமும் கடனை திரும்ப அளிக்கும்படி கேட்டுள்ளதால் இம்ரான் கான் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளார்.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசரான ஷேக் முகமது பின் சயித்தை சந்திக்க முயற்சி செய்து வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு அமீரகம் ஏன் திடீரென இவ்வளவு நெருக்கடி அளிக்கிறது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விற்ற வீட்டில் புது ஓனருக்கு தெரியாமல் 7 ஆண்டுகள் வாழ்ந்த கில்லாடி பெண்

east tamil

இஸ்ரேலும் மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகல்

east tamil

யூதர்களுக்கு ஆதரவாக மனித உரிமை பேரவையில் இருந்து விலகிய அமெரிக்கா

east tamil

திருநங்கைகள் விளையாட்டில் பங்கேற்க தடை – ட்ரம்ப்

east tamil

DeepSeek ஆபத்தானது

east tamil

Leave a Comment