திருக்கேதீச்சரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்!

Date:

வரலாற்று சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு நேற்று வியாழக்கிழமை(11) இடம் பெற்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து செல்லும் நிலையில் சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக மஹா சிவராத்திரி நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது.

பொலிஸார்,இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புகளுக்கு மத்தியில் கடுமையான சுகாதார நடை முறைகளுடன் சிவராத்திரி நிகழ்வுகள் இடம் பெற்று வருவதோடு, ஆறு ஜாம பூஜைகளும் இடம் பெற்று வருகின்றது.
அதே நேரத்தில் இராணுவம் பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையினரின் கண்காணிப்பின் கீழ் மஹா சிவராத்திரி பூஜைகள் இடம் பெற்று வருகின்றது.

பாலாவி தீர்த்த கரையில் நீராடுவதும் தீர்த்தம் எடுத்து செல்வதும் பாதுகாப்பு காரணங்களால் தடை செய்யப்பட்டுள்ளது.

சிவராத்திரி நிகழ்வுகளை முன்னிட்டு திருக்கேதீஸ்வர திருப்பணி சபையின் ஏற்பாட்டில் பல்வேறுபட்ட இந்து கலாச்சார நிகழ்வுகள் அறநெறி சொற்பொழிவு நிகழ்வுகளும் இடம் பெற்று வருகின்றது.

சுகாதார துறையினர் கொரோனா தொடர்பில் சுகாதார நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

இந்தியாவின் நலனுக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும்...

மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்