பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அவர்கள் மீது சனிடைசரை அடித்த தாய்லாந்து பிரதமர் செயலுக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன.
தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓச்சா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது 7 வருடங்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கிளர்ச்சிக்காக 3 அமைச்சர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். எனவே காலியான இடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளிக்காமல், ‘வேறு எதாவது கேள்வி உள்ளதா? எனக்கு தெரியாது. நான் இன்னும் அதனை காணவில்லை. இதை தான் ஒரு நாட்டின் பிரதமர் முதலில் தெரிந்து வைத்து கொள்ள வேண்டுமா’ என்று கேட்ட பிரயூத் சான் ஓச்சா, பத்திரிகையாளர்களை நோக்கி சனிடைசரை தெளித்தார்.
இந்த நிகழ்வுக்கு பல்வேறு சமூக ஆர்வலர்களை கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்து இராணுவத்தின் முன்னாள் தளபதியாக இருந்தவர் பிரதமர் பிரயூத் சான் ஓச்சா என்பது குறிப்பிடத்தக்கது.